Breaking News

போட்டி போட்டு ஓடிய டிப்பர் வாகனங்கள் - தாயுடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்


இரண்டு டிப்பர் பாரவூர்திகள் போட்டி போட்டு ஓடியதால் தாயுடன் சென்ற 11 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட டிப்பர் பாரவூர்திகள், வீதியின் குறுகலான பகுதியை அடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ஒன்று மோதியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் அவரது 11 வயதுடைய மகளும் டிப்பர் ரக வாகனத்தால் பின்னாலிருந்து மோதப்பட்டனர். பெண் வீதியோரத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில், டிப்பர் வண்டி மோதியதில் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிறுமி மீது மோதிய டிப்பர் பாரவூர்தியின் சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Vavuniyan) 

No comments