மரண அறிவித்தல் - கதிரமலைநாதன் பரந்தாமன்
அன்னார் வட மத்திய மகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும், வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற முதுதமிழ் புலவர் மு. நல்லதம்பி அவர்களின் பேரனும், காலஞ்சென்றவர்களான சித்த வைத்தியகலாநிதி கதிரமலைநாதன் ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லட்சுமணர் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஸ்ரீரஞ்சனி அவர்களின் ஆருயிர் கணவரும், இந்துயாழினி (4ம் வருட மாணவி, விவசாயபீடம், யாழ் பல்கலைக்கழகம்), நிரூபன் ( 3ம் வருட மாணவன், பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்), கிருசன் (1ம் வருட மாணவன், பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்), அனுஷ் (க.பொ.த உயர் தரம், விபுலானந்தா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பூமகள் (பிரான்ஸ்), அமரர் கதிர் சரவணபவன் , நவரூபவதி, தேவாம்பாள், சௌந்தரராஜன்(பிரான்ஸ்), கீதாம்பாள் (பிரான்ஸ்), லோகநாதன் (சுவிஸ்), அமரர் சிற்சபேசினி, ஜெயலட்சுமி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
சர்வேஸ்வரி(பிரான்ஸ்), வதனச்சந்திரன் (ஜேர்மன்), ஞானச்சந்திரன் (பிரான்ஸ்), நயனச்சந்திரன் (லண்டன்), புவனச்சந்திரன் (லண்டன்), சிவச்சந்திரன் (பிரான்ஸ்), சிவபிறைச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 16.02.2022 (புதன்கிழமை) அன்று காலை 1.30 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு _+94242225742
No comments