இலங்கை மீனவர்கள் போராட்டம்… யாழ். மாவட்ட செயலகம் முடக்கம்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யக்கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊழியர்களை செயலகத்திற்குள் செல்ல தடை விதித்து போராட்டம் நடத்துகின்றனர்.
பல மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், பிரதான வீதியில் அமர்ந்து போக்குவரத்தை தடை செய்யும் வகையிலும் இவர்களது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.(Vavuniyan)
No comments