Breaking News

விரைவில் மாகாணசபை தேர்தல் நடைபெறும் - கே. மஸ்தான் எம்.பி


விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று தேர்தலும் இடம்பெறும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டன் பின்னர் புதிய அரசியல் அமைப்பில் மாகாணசபை முறைமை நீக்கப்படும் என தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஒவ்வொருவரும் தற்போது தாங்கள் நினைத்ததை கூறுகின்றனர். 13 ஆவது திருத்தம் இல்லாமல் ஆக்கப்படும் என்று இல்லை. இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்படும் என எமது தரப்பாலும் இதுவரையில் எமக்கு கூறப்படவும் இல்லை.

ஒரு சமூகத்திற்கான தீர்வாக மாகாணசபைகள் இருக்கும் போது அதனை இல்லாமல் ஆக்குவார்கள் என்பதெல்லாம் தேர்தல் காலத்தில் சொல்லப்படுவதுபோல பிழையான கருத்துக்கள். உண்மையில் மாகாணசபை தேர்தலை வைக்கமுடியாத சூழலை ஏற்படுத்தியதே கடந்த அரசாங்கம்தான்.

எனினும் விரைவாக அதற்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மாகாணசபை தேர்தலும் விரைவில் நடைபெறும் என தெரிவித்தார்.(Vavuniyan)

No comments