இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட போது புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுன்டே இளைஞன் பலியாகியுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் விறகு ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெல்லிப்பளைக் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
No comments