தாயின் அனுமதியுடன் சிறுமி துஷ்பிரயோகம் - மூவர் கைது
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது வைத்தியர்களால் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவர் 4 மாத கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் இரண்டாவது சந்தேக நபர் பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.(Vavuniyan)
No comments