வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்இ அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே விளையாடுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஏற்கனவே கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குசல் மெண்டீஸ், இன்றைய தினம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Vavuniyan)
No comments