எரிபொருள் பிரச்சினைக்கு நேற்றிரவு ஜனாதிபதி வழங்கிய அதிரடி உத்தரவு
எரிபொருள் தட்டுபாடு தொடர்பில் நேற்று (22) இடம்பெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பின் போதே ஜனாதிபதி குறித்த ஆலோசனையினை வழங்கியுள்ளார்.
அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய விசேட அமைச்சரவை சந்திப்பில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
இதேவேளே, இலங்கை மின்சார சபையினால், பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவும் இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பெற்றோலிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று விசேட அமைச்சரவை சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு, மின்சார சபை செலுத்த வேண்டிய கடனை, அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments