Breaking News

அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை!


மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது.

குறித்த சுற்றறிக்கை இன்று (21) வெளியிடப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி (J.J. Ratnasiri) தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, கொழும்பில் நடைபெறவுள்ள விசேட மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அரச வாகனங்களில் தலைவர்களை அழைப்பதை கட்டுப்படுத்துமாறு அமைச்சின் செயலாளர் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். (Vavuniyan) 

No comments