Breaking News

ஆறு பேர் இராணுவத்தினரால் கைது!


கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ள்ப்பட்ட சுற்றி வளைப்பின் போதை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் தமிழர்கள் என்றும் ஒருவர் இஸ்லாமியர் என்றும் தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments