Breaking News

மேற்படிப்பிற்காக செல்லவுள்ள வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர்


வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் மருத்துவ நிர்வாக மேற்படிப்பிற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் நாளை ( 15.02.2022) முதல் பயிற்சியை மேற்கொள்வதற்காக செல்லவுள்ளார். 

இன்று வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது கடமைகளை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி மதுரகனிடம் கையளித்துள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சிற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொரனா கொடுந்தொற்று காலத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான சேவையை வழங்குவதற்கு வைத்தியசாலையை சீரமைத்ததுடன், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார பணியாளர்களை ஒழுங்கமைத்து சிறப்பான  சுகாதார சேவையை வழங்கியிருந்ததுடன் பலரது பாராட்டையும் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் பெற்றிருந்தார். 

இதேவேளை வைத்தியசாலையின் பெளதீக வளங்களோடு வைத்திய உபகரணங்களையும் மத்திய மாகாண சுகாதார அமைச்சுக்களில் இருந்து பெற்று வைத்தியசாலையின் சுகாதார வசதிகளை மேம்படுத்தியிருந்ததுடன் அண்மையில் பிசீஆர் ஆய்வுகூடமும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் தொழிற்படு நிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சேவை வழங்கலின் தரத்தினை குறுகிய காலத்தினுள் பல்வேறு பரிமாணங்களில் விருத்தி செய்திருந்த நிலையில் அவர் மேற்படிப்பிற்காக சுகாதார அமைச்சுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments