வவுனியா கூமாங்குளத்தில் காஸ் அடுப்பு வெடிப்பு : பொலிஸார் விசாரணை
வவுனியா கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் றொட்டி சுட்டுக்கொண்டிருந்த போது திடீரென்று காஸ் அடுப்பு வெடித்துள்ளது. இதனையடுத்து வீட்டார் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)
No comments