Breaking News

வவுனியா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்தியர் நிலக்ஸன் நியமனம்


வவுனியா பொது வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியகலாநிதி க. ராகுலன் மேற்படிப்பொன்றுக்காக மத்திய சுகாதார அமைச்சுக்கு சென்ற நிலையிலேயே வைத்தியசாலையில் காணப்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக்கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகாலாநிதி அசேல குணவர்தரதனவின்  கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.(Vavuniyan) 

No comments