மின் துண்டிப்பால் மாணவர்களுக்கு பாதிப்பு – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக, இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயற்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதால், குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களுக்கு வெவ்வேறு நேரங்களில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதால், தொலைதூர பகுதிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மின்வெட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. (Vavuniyan)
No comments