Breaking News

அஜித் ரோஹணவின் புதிய அறிவிப்பு


போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே வீதி விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதனை தவிர்க்குமாறு தெரிவித்ததோடு, அதற்கு பதிலாக விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.  (Vavuniyan) 

No comments