Breaking News

இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி


இலங்கை அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஷங்க 75 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 47 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

வெற்றி பெறுவதற்கு 184 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது. 

மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில், முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. (Vavuniyan) 


No comments