வவுனியாவில் அரச திணைக்களங்களின் நடமாடும் சேவை!
வடமாகாண அரச திணைக்களின் பங்குபற்றுதலுடனான நடமாடும் சேவை வவுனியா பரகும் மகாவித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவையினை வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனவினவால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இச்சேவைகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.
வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான குறித்த நடமாடும் சேவையானது காலை 10.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை பொதுமக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்கு தீர்வு பெறும் நோக்குடன் அதிளவில் கலந்து கொண்டதுடன், தங்களின் நீண்ட கால பிரச்சனைகயிற்கான தீர்வினை பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடீதாக இருந்தது.
வடமாகண பிரதமசெயலாளர் சமன்பந்துலசேன மற்றும் வடமாகாண அரச திணைக்களங்களின் தலைவர்கள், கலந்துகொண்டிருந்ததுடன் 25 அரச திணைக்களங்கள் குறித்த நடமாடும் சேவையின் ஊடாக தங்கள் சேவையினை பொதுமக்களிற்கு வழங்கியமை குறிப்படத்தக்கது.(Vavuniyan)
No comments