Breaking News

வவுனியாவில் சுதந்திர தின வைபவத்தில் மயங்கியவர்களால் பரபரப்பு


வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தினவைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நிகழ்வில் அணிநடையில் கலந்து கொண்ட  மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீர் என மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

அதிக நேரம் வெயிலில் நின்றமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது

உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகைச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது.(Vavuniyan) 














No comments