வவுனியா சகாயமாதாபுரத்தில் சனசமூக நிலைய கட்டிடம் திறந்து வைப்பு
வவுனியா சகாயமாதாபுரத்தில் சனசமூக நிலைய கட்டிடம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் கடந்த ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபா நிதியின் ஊடாக குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சன சமுக நிலைய தலைவர் ஜோன்மேரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் கிருஸ்தோபர், கிராமசேவையாளர், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(Vavuniyan)
No comments