Breaking News

வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் விஜயம்


வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா விஜயம் ஒன்று மேற்கொண்டிருந்தார்.

இன்று மதியம் 2.00 மணியளவில் வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம் செய்ததுடன் அலுவலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன் போது உத்தியயோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan)




No comments