Breaking News

வவுனியா கணேசபுரத்தில் விபத்து - இளைஞர் பலி


வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 
சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவதோடு, விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளான இளைஞர் ஒருவரையும், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மரணமடைந்த இளைஞன் பண்டாரிக்குளத்தினை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் (வயது – 32) என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.(Vavuniyan)







No comments