முந்திரி வயின் தயாரிக்கும் இலங்கை - சந்தையில் கிடைக்கும் கால எல்லை அறிவிப்பு
முந்திரி பழத்தில் இருந்து வயின் தயாரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக முந்திரி கூட்டுதாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சாரங்கா ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
முந்திரி பழங்கள் ஏப்ரல் மாதத்திலேயே அதிகளவில் கிடைக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, ஏப்ரல் மாதத்தில் முந்திரி வயின் தயாரிக்கப்பட்டு, அதனை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டுதாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். (Vavuniyan)
No comments