Breaking News

மூவரைப் பலியெடுத்த மண்மேடு!


கண்டி - வத்தேகம பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து, கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடொன்றிற்கு பின்புறமாக இருந்த மண்மேடொன்றே இவ்வாறு சரிந்து வீழ்ந்ததில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ் அனர்த்தம் தொடர்பான  மேலதிக விசாரணையினை வத்தேகம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.(Vavuniyan) 

No comments