Breaking News

வாட்ஸ்அப் ல் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்? உங்கள் தொலைபேசியிலும் பயன்படுத்தலாமா?


வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அத்தோடு இந்நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனுள்ள அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் குரலிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மேசேஜ் வசதி உள்ளது. தற்போது இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்துஇ சாட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மேசேஜ்ஜை பார்க்க முடியும். ஆனால்  ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் அந்த வாய்ஸ் மேசேஜ் ஆனது தானாக நின்றுவிடும் என்பது நமக்கு தெரியும்.

தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் மூலம், வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஒடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சாட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் எனத் தகவல் வெளிவரவில்லை.

அதேபோல் பேஸ்புக் போன்று சுயவிவரங்களுக்கான கவர் போட்டோவை வாட்ஸ் அப்பில் வைப்பதற்கான ஏற்பாட்டு பணியில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சுயவிவரங்களில் கவர் போட்டோக்களை வைக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சம் சமீபத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சம் வணிக கணக்குகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Wabetainfo தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் கார்ட் புகைப்பட அம்சத்தை விரைவில் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த அம்சம் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் நிலையான பயனர் கணக்குகளுக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த அம்சம் பீட்டா பயன்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. (Vavuniyan)

No comments