Breaking News

வவுனியாவில் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் ஆர்பாட்டம்!!


சுகாதார தறைசார்ந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  

தமது சம்பள முரன்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்த்துவைக்குமாறு தெரிவித்து குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், 

எமது கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு சம்மதம் தெரிவித்திருந்தது. எனினும் மூன்றுமாதகாலமாகியும் அது நடைமுறைப்படுத்தப்படாமையினால் நாம் இந்த போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். 

எனவே எமது சம்பள முரன்பாட்டை உடனடியாக தீர்த்து ரணுக்கின் சம்பள உடன்படிக்கையைஅமுல்படுத்துமாறும் எமது பதவி உயர்வானது முன்னர் ஆறுவருடங்களில் பரிசீலிக்கப்பட்டு தற்போது பத்துவருடங்களில் பரிசீலிக்கப்படுகின்றது. எனவே அதனை ஆறுவருடங்களில் பரிசீலிக்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். என்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணுக்கின் சம்பள உடன்படிக்கையை அமுல்படுத்து, டி,ஏ,ரியை10 ஆயிரமாக அதிகரி, பதவி உயர்வு முரன்பாடுகளை தீர்த்துவை, மருந்துகளின் விலைகளை குறை போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். (Vavuniyan)














No comments