Breaking News

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்புகிறது ஜேர்மன்


1,000 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு ஜேர்மனி அனுப்பவுள்ளது.

குறித்த தகவலை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை குறித்த நடவடிக்கை காட்டுகிறது.

“இந்தச் சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு எதிராக உக்ரைனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜேர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். (Vavuniyan) 

No comments