Breaking News

யுக்ரேன் − ரஷ்யா முதல் நாள் யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள்?


ரஷ்யாவுடனான முதல் நாள் யுத்தத்தில் தமது நாட்டு பிரஜைகள் 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸகி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவிக்கின்றார்.

ரஷ்யாவிற்கு சொந்தமான 5 ஹெலிகொப்டர்களை யுக்ரேன் வீழ்த்தியுள்ளதுடன், இரண்டு ரஷ்ய இராணுவத்தை யுக்ரேன் சிறைபிடித்துள்ளது.

இதேவேளை, யுக்ரேன் மீது ரஷ்யா நேற்றைய தினத்தில் மாத்திரம் 200ற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா நடத்திய தாக்குதல் காரணமாக, யுக்ரேன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது உலக போருக்கு பின்னராக காலத்தில் ஐரோப்பிய நாட்டில் இவ்வாறான யுத்தமொன்று முதல் தடவையாக ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய படைகள், தரை மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும், யுக்ரேன் எல்லைக்குள் நேற்று நுழைந்து கடும் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

இவ்வாறு ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், யுக்ரேன் தலைநகரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.(Vavuniyan) 

No comments