மாடியிலிருந்து விழுந்த இளைஞன் மரணம்
பொரளை – சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளை – சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments