வெளிநாட்டுப் பெண்களுக்கு இலங்கையில் நடந்த கொடுமை
தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் ஜேர்மன் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் எல்ல, பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுற்றுலா வழிகாட்டியான சந்தேகநபர், தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் ஜேர்மன் பெண்ணுடன் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று குறித்த நபரால் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதேவேளை, கண்டியில் வசிக்கும் நபரால் மற்றுமொரு ஜேர்மன் பெண், போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவமும் கொள்ளுப்பிட்டியில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். (Vavuniyan)
No comments