Breaking News

ரஷ்யா – யுக்ரேன் பேச்சுவார்த்தை முடிந்தது


ரஷ்யா – யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் முடிவடைந்தது.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையிலான குறித்த சந்திப்பில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை தொடரும் முன்பாக, இரு தரப்பினரும் தத்தமது தாயகத்துக்குச் சென்று மீண்டும் கூட முடிவு செய்துள்ளதாக பெலாரூஸ் செய்தி நிறுவனமான பெல்டாவின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின் விரிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் வெளிவரும் தகவல்களின்படி யுக்ரேன் தரப்பில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, யுக்ரேன் முழுவதும் உள்ள ரஷ்ய படைகள் யுக்ரேனிய தரப்பின் கடுமையான எதிர்வினையை சந்தித்து வருகின்றன.

இதேவேளை, ரஷ்யா உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார தடைகளுக்கு ஆளாகி பெரிய அளவில் அந்த நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments