எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் - அரசாங்கம் அறிவிப்பு
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என கூறிய அவர், இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எட்டவில்லை என குறிப்பிட்டார்.
அத்துடன், யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் எழுந்துள்ள யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் பட்சத்தில், உள்நாட்டிலும் எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments