வவுனியாவில் சுதந்திரதின நிகழ்வு
இலங்கை நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடமபெற்று இருந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமாகிய கு.திலீபன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவந்திருந்தார்.
அத்தோடு பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மற்றும் பொலிஸ், சிவில்பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றிருந்ததோடு மூவினத்தினவர்களின் கலாச்சார நடனங்களும் இடம்பெற்றிருந்தது.
இச்சுதந்திர நிகழ்வில் சிங்கள மாணவர்களினால் தமிழ் மூலமும், தமிழ் மாணவர்களினால் தேசிய கீதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments