Breaking News

வீடொன்றுக்குள் திடீரென புகுந்த மர்மக் கும்பல்!! குடும்பப் பெண் சுட்டுக் கொலை


களுத்துறை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல் ஒன்று பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, பாலிகா வீதியில் நேற்றிரவு 9 மணியளவிலேயே குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா (40) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில்இ மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் வீட்டு வளவினுள் நுழைந்துள்ளனர். அவர் கணவர் பிள்ளைகளுடன் அறை ஒன்றுக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட நிலையில், வீடு புகுந்த துப்பாக்கிதாரிகள் அவ்வறையின் கதவை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலஜஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், குறித்த துப்பாக்கிதாரிகள் வீட்டின் பல இடங்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மத்துகம பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (Vavuniyan)

No comments