யாழ். பல்கலைக்கழக மாணவிகளிடையே மோதல் - ஒருவர் வைத்தியசாலையில்!!
யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (Vavuniyan)
No comments