கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
கொவிட் ஒமிக்ரோன் பிறழ்வு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றமையினால், கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
மில்லியன் கணக்காக இதற்கு முன்னர் கிடைக்கப் பெற்ற கொவிட் பரிசோதனை உபகரணங்கள், தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இருந்தபோதும், நாட்டின் பயன்பாட்டிற்கு தேவையான கொவிட் பரிசோதனை உபகரணங்கள் தற்போது கைவசம் இருப்பதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பலர் இன்னும் நாட்டில் உள்ளதாக கூறிய அவர், ஏதேனும் ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.(Vavuniyan)
No comments