ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு
ஶ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (19) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டதுடன். இக்கலந்துரையாடலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாக செல்கின்றோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதர கட்சிகளை இணைத்துக் கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம் எனவும் மக்கள் அனைவரும் குறித்த கட்சிக்கு ஆதரவு வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமால் சிறீபால, தயாசிறி ஜெயசேகர, துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan)
No comments