Breaking News

வவுனியாவில் காணி அமைச்சின் நடமாடும் சேவை


வவுனியா,மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான நடமாடும்சேவை ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.


காலை 9.00 மணி முதல் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கலந்துகொண்டு நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கு.திலீபன்,செல்வம் அடைக்கலநாதன்,காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்ட அரச அதிபர்கள், திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். (Vavuniyan)





No comments