இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப் பாதைகள்
விஹாரஹேன − அடாரதெனிய பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளுக்காக, வீதியின் இரு புறத்திலும் உள்ள மண்மேடுகளை வெட்டிய போது, அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் எதுவும் கிடையாது என தெரிய வருகின்றது.
எனினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது
குறித்த சுரங்கப் பாதைகள் எக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவையா அல்லது இயற்கையாகவே உருவானதா? என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, குறித்த சுரங்கப் பாதை குறித்து ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அப்பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். (Vavuniyan)
No comments