பேருந்து குடைசாய்ந்ததில் அறுவர் படுகாயம்
இன்று காலை குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது குருணாகல் மற்றும் நாரம்பல பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும், ஒரு சிறுவர் உட்பட ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருணாகலையில் இருந்து திருகோணமலை சேருவில விகாரையை பார்வையிட்டு குருணாகலுக்கு திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)
No comments