Breaking News

வவுனியா பல்கலைகழகத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அரசதலைவர்!!


வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வு  அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. 

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்  தனியான பல்கலைக்கழகமாக கடந்தவருடம் அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தப்பட்டது. 

இதனை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில். பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை10.30மணிக்கு இடம்பெற்றது. 

அதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டு பல்கலைகழகத்திற்கான நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார். அதனை தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் கல்விஅமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கு.திலீபன், துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன்,அமைச்சின் செயலாளர்கள், மதகுருமார்கள், திணைக்களத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  (Vavuniyan)







No comments