Breaking News

பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டமையை உறுதிப்படுத்த புதிய முறை


பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டமையை உறுதி செய்வதற்கு கையடக்கத் தொலைபேசி செயலி (APP) ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

பொது இடங்களுக்கு செல்லும் போது, பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டமை எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்னர் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டமையை கண்டறிவதற்கான செயலி ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (Vavuniyan)

No comments