இன்றும் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு
வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (05) முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் அடித்துச் சென்றுள்ளர். இவ்வாறு அடித்துச் சென்றவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஞ்சிய மூவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பதுளை – எட்டம்பிட்டிய பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments