EPF, ETF மற்றும் வரி குறித்து நிதி அமைச்சர் விசேட அறிவிப்பு
வருடாந்தம் 2000 மில்லியன் ரூபா வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 25 சதவீத ஒருநேர வரி அறவிடப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட 11 நிதியங்களுக்கு இந்த வரி அறவிடப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இது குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.
ஒரு தடவை அறவிடப்படும் வரி மூலம் வருடமொன்றுக்கு 100 மில்லியன் ரூபா வரையான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். (Vavuniyan)
No comments