Breaking News

பிச்சைக்காரரிடமிருந்து லட்சக்கணக்கான பணம் (PHOTO)


ஹக்மன பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகர் (பிச்சைக்காரர்) ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹக்மன – கொங்கல பகுதியில் வாழ்ந்து வந்த 69 வயதான E.S.விமலதாஸ என்ற யாசகரிடமிருந்தே, இவ்வாறு பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யாசகர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே, அவர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  (Vavuniyan) 

No comments