Breaking News

இந்திய T20 சுற்றுப் பயணத்தில், நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்தது இலங்கை


இந்திய கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கான சந்தர்ப்பத்தை, இலங்கையின் முன்னணி வீரரான வனிந்து ஹசரங்க இழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் நடத்தப்பட்ட பிசிஆர் (PCR) பரிசோதனையில், வனிந்து ஹசரங்கவிற்கு தொடர்ந்தும் கொவிட் 19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதையடுத்து, வனிந்து ஹசரங்கவிற்கு தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டிகளில் வனிந்து ஹசரங்கவிற்கு பங்குப்பற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

வனிந்து ஹசரங்க, அணியில் இடம்பிடிக்காமையானது, இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். (Vavuniyan) 

No comments