Breaking News

05/03/2022 இன்றைய ராசிபலன்


மேஷ ராசி அன்பர்களே - சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. விரைய செலவு ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம்.


ரிஷப ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுக்க வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாட்டி கடன் வாங்க வேண்டியிருக்கும்.


மிதுன ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் பெரிய அளவில் பண முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வருமானம் வரும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.


கடக ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனநிலையில் தெளிவாக இருப்பீர்கள்.


சிம்ம ராசி அன்பர்களே - சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் வெளியே வேகமாக எங்கும் போக வேண்டாம். அப்புறம் பிரச்சினையாகிவிடும்.


கன்னி ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தருவார். காரணம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.


துலா ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். கடன் வாங்க வேண்டாம் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நோய்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.


விருச்சிக ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் உங்களுடைய பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.


தனுசு ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் மன நிம்மதி ஏற்படும். வீடு பராமரிப்பு செலவு வரும். உங்களுக்கு சுகமான நாள் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவு இன்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.


மகர ராசி அன்பர்களே - சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதேபோல செலவுகளும் இருக்கும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது.


கும்ப ராசி அன்பர்களே - சந்திரன் இன்று உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மந்தமான நாளாக இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வேலையில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.


மீன ராசி அன்பர்களே - சந்திரன் உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். உங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும் உற்சாகம் கிடைக்கும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

No comments