Breaking News

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களில் காச நோயினால் 100 பேர் பாதிப்பு, 15பேர் மரணம் - மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார்


வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களில் காச நோயினால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15பேர் மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
உலக காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. இம்முறை “காசநோயை இல்லொதொழிப்பதற்கு முதலிடுவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவோம்”. எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

 மேலும் மார்ச் 24ம் திகதி வவுனியா மாவட்ட காச நோய் தடுப்பு பிரிவில் விழிப்புனர்வு செயலமர்வும், அதனை தொடர்ந்து பொதுமக்களிற்கான விழிப்புனர்வு நடைபவணியினையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனமானது ஒருலட்சம் மக்களில் 64 பேரிற்கு காசநோய் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது என குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வருடத்தில் 80 தொடக்கம் 90 பேர் வரை இணங்கானப்பட வேண்டும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் 2021ம் ஆண்டு 53 பேரும் 2020ம் ஆண்டு 47 பேரும் இணங்கானப்பட்டுள்ளதுடன் 2021ம் ஆண்டு இந்நோயினால் 08 பேரும், 2020ம் ஆண்டு 07பேரும் மரணமாகியுள்ளனர்.

இவ்விறப்புக்களிற்கு காலம் தாழ்த்தி சிகிச்சை பெற்றுக்கொண்டமை முக்கிய காரணமாகும்.  இந்நோயினை பொறுத்த வரை ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுமிடத்து இவ்வாறான இறப்புக்களை தடுக்க முடியும். 

காசநோயை பொறுத்த வரை இலங்கையில் 2021ம் ஆண்டு 6771 பேர் இணங்கானப்பட்டுள்ளதுடன், 2020ம் ஆண்டு 500 பேர் வரை காச நோயினால் மரணமடைந்துள்ளனர்.
 
எங்களது முக்கிய நோக்காக 2035ம் ஆண்டு இலங்கையில் இருந்து காசநோயினை முற்றாக இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் எங்களது செயற்பாட்டினை முன்னெடுக்கின்றோம்  என தெரிவித்திருந்தார். (Vavuniyan)

No comments