11/03/2022 இன்றைய ராசிபலன்
ரிஷப ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மிதுன ராசி அன்பர்களே - சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும்.
கடக ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். பணவரவு அதிகம் இருந்தாலும் சுப விரைய செலவுகளும் ஏற்படும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்றைக்கு நல்ல செய்தி ஒன்று தேடி வரும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும்.
கன்னி ராசி அன்பர்களே - சந்திரன் உங்க ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத விதமாக நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி தரும் செய்தி தேடி வரும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளை கொடுக்கும்.
துலா ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். இதுவரை வராத பழைய கடன் பாக்கிகள் கைக்கு வந்து சேரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முதலீடுகளால் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்தி தேடி வரும் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனமாக இருக்கவும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை.
தனுசு ராசி அன்பர்களே - சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். லாபம் அதிகரிக்கும்.
மகர ராசி அன்பர்களே - சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினை நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
கும்பம் ராசி அன்பர்களே - சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். இன்று உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் என்றாலும் கடன் பிரச்சினை நீங்கும்.
மீன ராசி அன்பர்களே சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சிக்கனமாக செலவு செய்வதால் கடன் பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும்.
No comments