Breaking News

பேருந்து கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிப்பு


இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணங்ள் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பேருந்து ஒன்றின்  குறைந்த கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று நடைபெற்றிருந்த அமைச்சரவை கூட்டத்தின் போது  முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக செகுசு, அரைசொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட சகல பேருந்துகளுக்குமான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

புதிய பேருந்து கட்டணம் தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் தொடருந்து கட்டணத்தையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். (Vavuniyan) 

No comments