17 வயது பெண் விபத்தில் பலி
பண்டாரவளை - தியத்தலாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியத்தலாவையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளிலுடன் எதிரே வந்த அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஊவாபரணகம, லூனுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் பலியானதுடட் அவருடன் சென்ற ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நோயாளர் காவு வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments